Home அறிவிப்புகள் பரவி வரும் டெங்கு காய்ச்சல்… களத்தில் மக்கள் நல பாதுகாப்பு கழகம்.. மூன்று நாட்களுக்கு நில வேம்பு கசாயம் தொடர் வினியோகம்..

பரவி வரும் டெங்கு காய்ச்சல்… களத்தில் மக்கள் நல பாதுகாப்பு கழகம்.. மூன்று நாட்களுக்கு நில வேம்பு கசாயம் தொடர் வினியோகம்..

by ஆசிரியர்

கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் சாமானியன் முதல் பொறியாளர் வரை டெங்குவால் பலி என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு பலதரப்பில் எழுப்பபட்டாலும் தன்னார்வ நிறுவனங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு மருந்தான நிலவேம்பு கசாயமும் வினியோகித்த வண்ணம்தான் உள்ளனர்.

இதை தொடர்ந்து கீழக்கரையிலும் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக நாளை (15-10-2017, ஞாயிறு) முதல் செவ்வாய் (18-10-2017) வரை நிலவேம்பு கசாயம் சுகாதார முறையில் காய்ச்சப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊரில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளும், ஆர்வலர்களும் மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேவையான அளவு பெற்று பொதுமக்களுக்கு வினியோகிக்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கும், நிலவேம்பு கசாயம் தேவைப்படுபவர்களும் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பணி மென்மேலும் தொடர கீழை நியூஸ் வோர்ல்ட் வாழ்த்துகிறது.

முகைதீன் இபுராஹீம்- 9443358305, 9677640305. முகம்மது சாலிஹ் ஹூசைன்:- 9791742074, முகம்மது இஸ்மாயில்:-9597048766, செய்யது முகம்மது பாதுஷா:-9944172759, ஹமீது அலி பாதுஷா:- 9789643781.

TS 7 Lungies

You may also like

1 comment

M U V mohideen ibrahim October 14, 2017 - 10:22 pm

எங்கள் சமூக பணியை தங்கள் இணைய தள பக்கத்தில் வெளியிட்ட கீழை நியூஸ் நிறுவனத்தாருக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!