கீழக்கரை நகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நகராட்சி தீவிரம்…

கடந்த ஒரு மாத காலமாக கீழக்கரை நகராட்சி எல்லலைக்குள் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று (13-10-2017) நகராட்சி புதிய பஸ் நிலைய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைந்திருந்த மேற்கூரை, ஹோட்டல்களில் சாலைகளை மறித்து போடப்பட்டிருந்த அடுப்புக்கள், மேசை போன்ற ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையாளர் வசந்தி அவர்கள் தலைமையில் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த துரித பணி டெங்கு நோய் குறித்து ஆய்வு பணிக்காக கீழக்கரைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் துரிதமாக நடைபெறுவதாக அறியமுடிகிறது. அதே போல் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் பெண்களுக்கு தொந்தரவாகவும், பல குடும்பத்தினரின் சந்தோச வாழ்கையை ஆக்கரமித்து இருக்கும் மதுக்கடைகளை அகற்றினால் பொதுமக்கள் கூடுதல் சந்தோசம் அடைவார்கள்… அரசு அதிகாரிகள் செவி சாய்யப்பார்களா??