ஆர்ப்பாட்டங்கள் பல.. டெங்குவை கட்டுப்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசு தினமும் டெங்கு நோயை கட்டுபடுத்துவதாக பல அறிக்கைகள் வெளியிட்டாலும், இக்காய்ச்சலால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து பிரதான எதிர்கட்சி முதல் உள்ளூர் சமூக அமைப்புகள் வரை பல் வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.