புதுமாயாகுளத்தில் அம்மன் கோயில் முளக்கொட்டு விழா..

கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தில் வாழவந்தாள் அம்மன்கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. கடந்த அக்டோபர் 2ம் தேதி அன்று காப்புகட்டுதலுடன் துவங்கியது.

இன்று முளைக்கொட்டு திடலில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுமாயாகுளம் அருகே கற்காத்தி மரைக்கா கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவின் ஏற்பாடுகளை ஊர் விழாக்குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.