ராமநாதபுரம் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இணைந்து தூய்மைப்படுத்தும் பணி..

இந்தியன் செஞ்சிலுவை சங்கம், ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமும் (ONGC) இணைந்து தூய்மை இந்தியா சேவை திட்டத்தின்படி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இப்பணிக்காக வாலாந்தரவை புகை வண்டி நிலையத்தை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்ந்த கல்லூரி மாணவர்கள் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பினர் (Youth Red Cross) மாணவர்களைக் கொண்டும்தூ தூய்மைப் படுத்தும் பணி (11.10.2017) அன்று நடைபெற்றது.