கீழக்கரை நகராட்சியில் தீபாவளியை ஒட்டி ஊழியர்களுக்கு புதிய உடைகள்..

கீழக்கரை நகராட்சியில் பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நநிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி தலைமை வகித்தார். தலைமை கணக்காளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நகரமைப்பு ஆய்வாளர் ஹபீப் ரகுமான் சீருடைகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, துப்புறவு மேற்பார்வையாளர் மனோகரன், சக்திவேல், ஹாஜா ராவுத்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
40 பேருக்கு வழங்கப்பட்டது.