புதிய கட்டடங்கள மற்றும் வரிவிதிப்பு செய்யாத கட்டிடங்கள் ஆய்வு செய்து வரி விதிப்பு.. கீழக்கரை நகராட்சி தீவிரம்…

கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 58 ஆயிரத்து 500 பேர் நகரில் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் கட்டடங்கள் புதியதாக கட்டப்பட்டு, வரிவிதிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றினை ஆய்வு செய்த வரிவிதிக்கும் செயலில்தீவிரமாக களம் இறங்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி கூறுகையில், வருகிற அக்., 31க்குள் நகராட்சி ஊழியர்கள், வருவாய் பிரிவு உதவியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, நகரில் கட்டடங்களை ஆய்வு செய்து வரிவிதிப்பு கணக்கீடுகள் செய்யப்பட உள்ளது என்றார்.