மார்க்கப் பிராச்சரம் மட்டுமல்ல.. மக்களை நோயில் இருந்து பாதுகாக்க, டெங்கு நோயை ஒழிக்க களம் இறங்கிய கீழக்கரை தவ்ஹீத் ஜமாத்….

கீழக்கரையில்்உள்ள அனைத்து TNTJ நிர்வாகிகளும் ஒன்றாக சேர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதாக சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இன்று (09-10-2017 மாலை கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் டெங்குவினால் ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரசுரங்கள் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வினியோகம் செய்ப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு தனி நபரிடமும் டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் மற்றும் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் விளக்கப்பட்டது. இன்றைய நிகழ்வுகளை கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

இதே போல் பல கிளைகளை சார்ந்த நிர்வாகிகள் தினமும் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று அறியப்படுகிறது.