சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் தமுமுக, மக்கள் நலன் காக்க டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் தீவிரம்…

தமுமுக அமைப்பு தமிழகத்தில் மற்றும் அல்லாமல் உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கம் மற்றும் இரத்த தானம் போன்ற பல சமுதாய பணிகள் செய்து வருவது அனைவரும் அறிந்த விசயம்.  தற்பொழுது தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு மற்றம் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, தமுமுக அமைப்பு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

நேற்று (09/10/2017) தமுமுக சார்பாக திருவாரூர் மாவட்டம் அகரபொதக்குடி, காந்திகாலனி,  சேகரை,  முகம்மது அலி தெரு தொடக்கப்பள்ளி,  மேல வாளச்சேரி மற்றும் பொதக்குடி போன்ற பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்துடன் நில வேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் இன்று (10/10/2017) வாணியம்பாடி பகுதிகளில் 60லிட்டர் அளவுக்கு நிலவேம்பு கசாயம் தயார் செய்யப்பட்டு சுமார் 1200 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.

மேலும் இன்று (10/10/2017) இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் விழிப்புணர்வு பணிகளும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

டெங்கு பிரச்சாரம் மற்றும் கசாயம் வழங்கும் நிகழ்வில் மமக நிர்வாகிகள் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.