வாகன விபத்தில் இருவர் பலி…

இராமநாதபுரம் சித்தார்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் இருவரும் மதுரை வேலம்மாள் மருத்துமனைக்குச் சென்று அவசர சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு இரத்த தானம் செய்து விட்டு ஊருக்கு திரும்பி செல்லும் போது கிழக்கு கடற்கரை சாலை கோப்பேரி மடம் செக்போஸ்ட் அருகே லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

விபத்ததுக்குள்ளானவர்களை தேவிபட்டினம் தமுமுக கிளை ஆம்புலண்ஸ் மூலமாக இராதநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.