மாநில அளவிளான வினாடி வினா போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து கீழக்கரைக்கு கூடுதல் மரியாதை சேர்த்த மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவிகள்..

கோவையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்திய துளிர் அறிவியல் வினாடி வினா போட்டியில் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியை சார்ந்த 11,12 ம் வகுப்பு மாணவிகள் K.சிந்து, செய்யது ரசியா, S.ஆயிசத்து சப்ரின் ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் அகமது முகைதீன், மஹ்தூமியா பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி மற்றும் பழைய குத்பா பள்ளி ஜமா தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர், உறுப்பினர் கள், மற்றும் மஹ்தூமியா கல்வி குழு உறுப்பினர்கள், மஹ்தூமியா பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

இப்போட்டியில் கீழக்கரையை சார்ந்த இரண்டு பள்ளிகள் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.