இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.. விதிகளை மீறுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க அழைப்பு எண்..

இராமநாதபுரத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் 06-10-2017 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டிய அவசியங்கள், சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் போன்றவை மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் சாலை விதிகளை மீறுபவர்களைப் பற்றி புகார் தெரிவிக்க 9498181475 என்ற எண் காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் சாலை பாதுகாப்பு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.