கீழக்கரை நகராட்சிக்கு வலுத்து வரும் எதிர்ப்பு..நாம் தமிழர் கட்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி ..

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே நகராட்சியின் தாமதாமான நடவடிக்கை மற்றும் ஊரில் பெருகி வரும் சுகாதாரப் பிரச்சினைகள், தீர்க்கப்படாத கழிவு நீர் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. புதிய ஆணையர் பொறுப்பேற்றவுடன் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் திட்டங்களை பள்ளிகள் மூலமாகவும், கல்லூரிகள் மூலமாகவும் விளம்பரப்படுத்திலேயே தற்போதைய நிர்வாகம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் புதிய புதிய இடங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்வதாக விளம்பரபடுத்தினாலும், பல வருடங்களாக சுகாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பழைய குத்பா பள்ளி தெரு, வடக்குத் தெரு சி.எஸ்.ஐ பள்ளி சாக்கடை தேக்கம், ஜும்ஆ பள்ளி வாசல் பகுதிகள் மற்றும் இன்னும் பல பகுதிகள் எந்த வகையான முன்னேற்றங்கள் இல்லாமல்தான் உள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கீழக்கரை நகர் முழுவதும் நகராட்சியின் போக்கை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதே போல் கீழக்கரையில் உள்ள சமூக நல அமைப்புகள், ஜமாத்தினர், சமூக ஆர்வலர்கள் என தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனுக்கள் அளித்த வண்ணம்தான் உள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுப்பதில் இவ்வளவு மெத்தனமாக இருப்பதற்கான காரணம் என்றவென்றே புரியவில்லை. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் வீதிக்கு வந்து வீரியமாக போராடும் நிலைதான் ஏற்படும்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..