விசாரனை கைதிகள் தப்பி ஓட்டம்…

நாகர்கோவில் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் தேவேந்திரன் என்ற இருவரையும் போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து இரண்டு நாள் விசாரணைக்குப்பின், நாங்குநேரி கிளைச்சிறையில் ஒப்படைக்க சென்ற போது, இருவரும் தப்பி ஓட்டம் எடுத்துள்ளனர். தப்பி ஓடிய 2 பேர் மீதும் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மணிகண்டன், டேவிட்டுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

மேலே படத்தில் இருக்கும் இரண்டு நபர்களையும் பொதுமக்கள் யாரேனும் கண்டால் அவர்களை பற்றியத் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.