Home செய்திகள் கீழக்கரையில் ஆழ்துழை கிணறுகளை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்…ஆனால் பல வருடங்களாக மாயமாகி போன பொதுக்கிணறுகளை கண்டுபிடிப்பது யார் ???

கீழக்கரையில் ஆழ்துழை கிணறுகளை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்…ஆனால் பல வருடங்களாக மாயமாகி போன பொதுக்கிணறுகளை கண்டுபிடிப்பது யார் ???

by ஆசிரியர்

கீழக்கரையில் இந்த வருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கீழக்கரை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 11 வார்டுகளில் அமைக்கப்பட்ட ஆழ்துழை கிணறுகளை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

மேலும் தூய்மை இந்தியா திட்டம் அக்டோபர் 02ல் இருந்து அக்டோபர் 15 ஆக நீடிப்பாகி உள்ளதால் புதிய பஸ் நிலையத்தில் திட்டத்தின் செயலாக்கத்தை பார்வையிட்டார் சில அறிவுரைகள் வழங்கியதோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பின்னர் நகராட்சி சார்பாக மாலாகுண்டில் அமைக்கப் பட்ட இரு கிணறுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வில் கீழக்கரை ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆனால் கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் 25 வருடங்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட பொதுக்கிணறுகள் இருந்தன, ஆனால் இன்று அவை இருந்த அடையாளமே இல்லாமல் போய்விட்டது. இருக்கும் ஒன்று அல்லது இரண்டு கிணறுகளில், புதர் நிறைந்து உபயோகிக்க முடியாத நிலையில் இருக்கிறது. தொலைந்து போன கிணறுகளைப் பற்றி சில மாதங்களுக்கு முன்பு நேரடி பேட்டியில் கீழக்கரை ஆணையரிடம் கேட்ட பொழுது “உங்களிடம் விபரம் இருந்தால் தாருங்கள், நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றார், இதுதான் இன்றைய நிலை.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களும் இதற்காக ஒன்றும் செய்யவில்லை, வரப்போகிறவர்களும் முயற்சி எடுக்கப்போவதில்லை, காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்..

TS 7 Lungies

You may also like

1 comment

Sadiq M J October 4, 2017 - 12:38 pm

எனது மதியறிய பருத்திக்காரத் தெருவில் செல்லாப்பா வீட்டுக்கருகில் ஒரு கிணறு இருந்தது, பின்னர் தரையோடு தரையாகி ஒரு குழந்தை கூட தவறி விழுந்து இறந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது அந்த இடம் வீணாகவில்லை அநேகமாக வீடாகி இருக்குமென நினைக்கிறேன்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!