அமெரிக்கா லாஸ்வேகஸ் குண்டு வெடிப்பும்.. இந்திய ஊடகங்களின் பித்தலாட்டமும்…

கடந்த திங்கள் (02-10-2017) அன்று அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகஸ் எனும் இடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் பேட்டாக் (PADDOCK) என்பவனால் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் அப்பாவி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூர செயலை அரங்ககேற்றியவனும், மனநோயாளியாக கருதப்படுபவனும் அதிகாரிகள் கைது செய்யும் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த நிகழ்வு அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வை இந்தியா மற்றும் உலக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ (ISI) என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறையான FBI அதை முழுமையாக நிராகரித்துள்ளது. மேலும் FBI அதிகாரிகள் கூறுகையில் இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட நபருக்கும், வேறு எந்த வித தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரனையில் தெரியவில்லை. இந்த நிகழ்வை வைத்து தீவிரவாத அமைப்புகள் பெயர் வாங்கவே முற்படுகின்றனர். இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவே இருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

——————————————/———————————

மேலும் குற்றவாளியின் சகோதரர் கூறுகையில், “சகோதரருக்கு எந்த வித அரசியல் கட்சிகளுக்கோ அல்லது மத அமைப்புகளுக்கோ தொடர்பும் கிடையாது. அதே சமயம் தன்னுடைய சகோதரர் முன்னாளில் பல குற்றப்பின்னனிகளுக்காக அமெரிக்காவில் தேடப்பட்ட நபராகவும் இருந்துள்ளார்” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

————————————/——————————————

ஆனால் இவ்வளவு உண்மைகளை அமெரிக்கா அரசாங்கமே வெட்ட வெளிச்சமாகி உள்ள நிலையில் நேற்று தொலைக்காட்சியில் செய்திகள் வழங்கிய இந்திய ஊடகங்களோ இந்த செயலைச் செய்தது இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற ரீதியில் ஒளிபரப்பியது ஊடகங்களில் கபடத்தன்மையை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது. ஒரு ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படுவது ஊடகத்துறை ஆனால் அந்த ஊடகத்துறையே கறை படிந்ததாக இருந்ததால் எப்படி நடுநிலையான ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழும்புகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..