துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்..

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கோ அல்லது குழுவுக்கோ தேவையான விசயத்தை எத்தி வைப்பதற்கு மிகவும் அவசியம் பேச்சு திறமை. நாம் சொல்ல கூடிய விசயத்தை சரியான முறையில் எடுத்துரைக்கவில்லை என்றால் கூற வேண்டிய கருத்துக்களே மாறிவிடும்.

இன்றைய நவீன உலகில் அதுவும் சமூக வலைதளங்கள் பெருகி வரும் வேளையில் சமூக அக்கரை கொண்ட ஒவ்வொரு மனிதனும் ஏதாவது தன்னால் இயன்றவற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே இருக்கிறான். ஆனால் ஆர்வம் உள்ள பலருக்கு பேச்சுதிறமை குறையாக இருக்கும், அதனால் தான் செய்ய எண்ணிய செயலில் இருந்து பின் வாங்கிவிடும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த குறையை போக்கிடும் வண்ணம் துபாயில் உள்ள ஈமான் என்ற அமைப்பு வரும் அக்டோபர் 5ம் தேதி 7 மணியளவில் க்ளாக் டவர் அருகில் உள்ள சலாமியா டவரில் பேச்சாளர் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.