அமீரகத்தில் புகையிலை மற்றும் குளிர் பானங்களுக்கு 50% முதல் 100% வரை வரி விதிப்பு அமல்…

அமீரகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் புகையிலை, சோடா, ஊக்க பானம் (Energy drink) போன்ற பொருட்களுக்கு கலால் வரி (Excise Tax) அமலுக்கு வர உள்ளது. பொது மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் வரி விதிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடலுக்கு தீங்கிழைக்கும் இது போன்ற பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக வரியை 50% முதல் 100% வரை சில குறிப்பிட்ட வகையான புகையிலை சார்ந்த பொருட்கள் மற்றும் குளிர்பானங்களுக்கு கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் ஊக்க பானத்துக்கு 100% வரியையும் சோடா போன்ற குளிர் பான வகைகளுக்கு 50% வரியையும் செயல்படுத்த உள்ளார்கள்.

இது போன்ற விரி விதிப்பு அமீரகத்தில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  சௌதி அரேபியாவில் இது போன்ற பொருட்களுக்கு இரண்டு மடங்கு வரிவிதிப்பு கடந்த வருடமே அமுல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..