கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவர்கள் புதிய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனர்…

கீழக்கரை ஹமீதியா பள்ளி NSS (National Service Scheme) சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.