வன சரக விழிப்புணர்வு போட்டிகளில் சாதனை புரிந்த இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்…

இந்தியாவில் வருடந்தோறும் வனத்துறை சார்பாக வன உயிரின வார விழா வருடந்தோறும் அக்டோபர் 2 முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் உயிரினங்களின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வனத்துறை சார்பாக பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

இராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வனத்துறை சார்பாக 25-09-2017 அன்று நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் பங்கேற்று பல பரிசுகள் பெற்றனர். இதில் மாணவி ஆயிஷத் ருக்சனா “வனவிலங்கு பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு (PEOPLE’S PARTICIPATION IN WILD LIFE CONSERVATION) என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

போட்டி நிறைந்த கல்வி நிலையங்கள் குவிந்து வரும் நிலையில், இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் பாடதிட்டத்தில் மட்டும் மாணவர்களை ஈடுபடுத்தாமல், மாணவர்களின் திறமைகளை சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறமைக்கேற்ப மாணவர்களை மாநில அளவில் அடையாளம் காட்டும் செயல் மிகவும் பாராட்டுக்குரியதாகும். இதற்கு உதாரணம் சமீபத்தில் இப்பள்ளி மாணவன் மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் நமக்கு அளித்த பேட்டியில், மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்திறமை படைத்தவர்கள்தான், ஆனால் அவர்களின் கவனங்களை மொபைல் போன்ற விசயங்களில் கவனத்தை சிதற விடாமல், அவர்களுக்கு சரியான பயிற்சி அளிப்பது மூலம் அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும்.  இஸ்லாமியா பள்ளியில் தனித்திறமைகளை வளர்ப்பதற்காக பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.  மேலும் இது போன்ற விசயங்களில் பள்ளியுடன் இணைந்து சரியான முறையில் பெற்றோர்களும் ஒத்துழைத்தால் இன்னும் பல திறமைகளை வெளி கொண்டு வரலாம் என்றார்,  மேலும் இதை ஒரு பெற்றோர்களுக்கு வேண்டுகோளாகவே வைத்தார்.

வீடியோ தொகுப்புகள் கீழே..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..