கீழக்கரை மக்கள் தாசில்தார் தமீம்ராசா பணியிடமாற்றம்..

கீழக்கரையில் பல அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருந்தாலும் தாசில்தார் மக்களின் அதிகாரியாக விளங்கினார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு சாமானிய மக்களுடன் ஒன்றினைந்து மக்களுக்கான தேவைகளை செய்யக்கூடியவராக இருந்தார்.

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இலவச மனு எழுதும் மையம் அமைவதற்கும் மிக முக்கிய காரணியாக விளங்கியவர். சமீபத்தில் தகுதி அடிப்படையில் துணை வட்டாட்சியராக பதவி உயர்வுடன் சமூக பொருப்பு தாசில்தாராக கீழக்கரைக்கே நியமிக்கப்பட்டார். அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் தகுதியற்றோர் அரசு உதவித் தொகை வாங்கி வருவதை ஆராய்ந்து, தயவு தீட்சண்யம் இல்லாமல் தகுதியற்றவர்களை தகுதிநீக்கம் செய்து அரசுக்கு வருவாய் ஈட்டி தந்து பாராட்டுகளையும் பெற்றார்.

இன்று மது விளக்கு பிரிவு தாசில்தாராக பணியிட மாற்றம் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளார் என அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அவருடைய பணி சிறக்க கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.