இடைவிடாத வாகன விபத்து.. பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க நல்ல நேரம் பார்க்கும் நெடுஞ்சாலை துறை ..

இன்று (26-09-2017) கீழக்கரை தெற்கு தெருவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இராமநாதபுரம் செல்லும் வழியில் மரபணு பூங்கா அருகே பழுதாகி நின்ற விறகு லோடு லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஆட்டோ சேதாரம் ஆகி ஓட்டுனர் சலீம் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர் கட்டாலீம்சா பங்களா அருகே வசிக்கும் நபர் ஆவார். ( முன்பு முட்டை வியாபாரி ) தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். அந்த ஆட்டோவில் பயணம் செய்த சதக்கத்துல்லா என்பவருக்கு கண் அருகே காயம் உண்டானது. அவருடன் பயணித்த மற்ற இருவருக்கும் சிறிதான காயம் ஏற்பட்டது. காயமடைந்தார்கள் 108 வாகனம் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக்குள்ளானவர்களின் அதிர்ஷ்டம் அவர்கள் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் மருத்துவரை தேடி கண்டுபிடிப்பதற்குள் சாதாரண காயம் அடைந்தவர்கள் கூட ஆபத்தான நிலைக்கு சென்றிருப்பார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.