கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் நகராட்சியின் உதவியுடன் நில வேம்பு கசாயம் வழங்கினர்…

கீழக்கரையில் சுகாதார சீர் கேட்டால் மலேரியா, மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு போன்ற நோய்கள் பரவலாக உள்ளது. சமீப காலமாக தேங்கி கிடக்கும் தண்ணீரால் உருவாகும் டெங்கு காய்ச்சல் கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் பரவலாகி வருகிறது.

இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகமும் பல விதிமுறைகளை விதித்து டெங்குவை கட்டுப்படுத்த எல்லா வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே சமயம் கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக நிலவேம்பு கசாயம் காய்ச்சி தெருக்களில் வழங்கி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இன்று வடக்குத் தெருவில் சமூக பணிகள் செய்து வரும் அல் அமீன் அமைப்பு, நகராட்சியும் இணைந்து வடக்குத் தெரு மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் நிலவேம்பு கசாயம் அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.

அரசாங்கமும், சமுதாய நல அமைப்புகளும் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தான் இருக்கும் இடத்தையும், சுற்றுவட்டாரத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி எடுக்காத வரை நோய்களை முழுமையாக ஒழிக்க முடியாது.