தலையை உரசும் மின்சார கம்பிகள்.. பயத்தில் வடக்குத் தெரு மக்கள்…

கீழக்கரையில் மின்வெட்டு எப்பொழுது என்ற குழப்பத்திலேயே மக்களை வைத்திருக்கும் மின்சார வாரியம், உயிரை எடுக்க தயார் நிலையில் இருக்கும் மின் வயர்களை பல முறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையான விசயம்.

கீழக்கரையில் வடக்குத்தெரு பகுதியில் உள்ள பல இடங்களில் மின் கம்பம் மிகவும் தாழ்வாக உள்ளது. அதே போல் வாகனங்கள் செல்லும் வழிகளிலும் வயர்கள் தாழ்வாக இருப்பதால் லாரிககள் போன்ற பெரிய வாகனங்கள் அவ்வழியாக செல்வது மிகவும் கடினமாகி விடுகிறது. வாகன்தை ஓட்டுபவர்களே உயிரை பணயம் வைத்து சீர் செய்ய வேண்டிய நிலையே உள்ளது.

இதே தெருவில் மின்சாரத்தினால் ஏற்கனவே இரு உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனால் மின்சார வாரியம் இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறது என்று புரியவில்லை. இதனை உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.