இருண்டு கிடக்கும் அடையாளங்கள்.. இருண்டதால் வழி தவறும் பிரயாணிகளும் பேருந்துகளும்…

கீழக்கரை முக்குரோடு என்பது கீழக்கரையை பிற ஊர்களில் இருந்து இணைக்கும் முக்கிய சாலையாகும். 24மணி நேரமும் அரசு மற்றும் தனியார் வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியூர் செல்லும் வாகனங்கள் ஊருக்கு உள்ளே வராத காரணத்தால் பொதுமக்கள் இந்த முக்கு ரோடு பகுதிக்கு வந்தே செல்ல வேண்டிய நிலை.

ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கு ரோடு பகுதயில் வெளிச்சம் தந்து கொண்டிருந்த உயர்அழுத்த மின்விளக்கு பல வாரங்களாக பழுந்தடைந்து இப்பகுதி முழுவதும் இருளடைந்து உள்ளது. ஆகையால் அப்பகுதிக்கு செல்லும் மக்கள் இரவு நேரங்களில் நாய் தொல்லைகளுக்கும் பயந்தவர்களாக உயிரை கையில் பிடித்தவர்களாகத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் இவ்வழியில் புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் பேருந்துகளும் வழி தவறி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் உள்ள விளக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..