கீழக்கரை தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்க பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது… நீடிக்கும் குழப்பம்…

கீழக்கரையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் தலைவருக்கும், வங்கி மேலாளருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இப்பிரச்சினை முற்றிய நிலையில் வங்கியின் மேலாளரை, சங்க தலைவர் பணி நீக்கம் செய்துள்ளார்.

இச்சம்பவத்தின் எதிரொலியால் வங்கி கடந்த 10 தினங்களாக எந்த பணியும் நடைபெறாமல் மூடியே கிடந்துள்ளது, இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட மேலாளர் இன்று (5-09-2017) வழக்கம் போல் வங்கிக்கு வந்து பணிகளை கவனித்துள்ளார். இதைக் கண்ட கூட்டுறவு சங்க தலைவர் தொலைபேசி மூலம் காவல்துறைக்கு சஸ்பெண்ட் ஆன மேலாளர் துஷ்பிரயோகம் செய்வதா புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக காவல்துறையினர் மேலாளரிடம் விசாரித்ததில், இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவு வாங்கியதாக கூறினார்.

இதனால் தலைவருக்கும், மேலாளருக்கும் வாக்குவாதம் முற்றி குழப்ப நிலை ஏற்பட்டது. ஆகையால் காவல்துறையினர் சம்பந்தபட்ட இருவரையும் காவல்நிலையத்திற்கு வருமாறு உத்தரவு பிரப்பித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..