இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

இன்று அதிகாலையில் ( 24-09-2017 ) முதுகுளத்தூர் தாலுகா கோழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செ.பூமிநாதன் (த/பெ.செந்தூரான்) என்ற வாலிபர் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ரயில் நிலையம் அருகே நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ரயிலில் தலை அடிபட்டு இறந்தாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.