கீழக்கரையில் தொடரும் வாகன விபத்து, அவசர மருத்துவம் செய்ய மருத்துவர் இல்லாத கீழக்கரை அரசு மருத்துவமனையின் அவல நிலை..

கீழக்கரையில் இன்று (24-09-2017), இதே ஊர் கோகுல் நகரை சேர்ந்த அபு ( 24 ) மற்றும் மறவர் தெருவை சேர்ந்த முத்துப் பாண்டி ( 25 ) ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பொழுது முனீஸ்வரம் கோவில் ஆம்னி மற்றும் காரின் மீது தடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வாகனத்தை ஓட்டி வந்த முத்துப்பாண்டிக்கு சிகிச்சை அளிக்க இராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளபட்டுள்ளார். அபு என்பவருக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஆனால் விபத்து நடந்த நேரத்தில் உடனடியாக முதலுதவி அளிக்க அரசாங்க மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதது மிகவும் வேதனையான விசயம். சில நேரங்களுக்கு பின்னர் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் செவிலியர்களால் மருத்துவ உதவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இன்று மூச்சு திணறல் காரணமாக அரசு மருத்துவமனையை நாடி வந்த பிரபுக்கள் தெருவும் சார்ந்த பெண்மணிக்கும் மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவம் செய்ய முடியாத சூழலே ஏற்பட்டது.  அப்பெண்ணின் நோயின் தீவிரத்தை அறிந்து சமூக ஆர்வலர்களால் முஸ்லிம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..