மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…

கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும். ஆனால் இன்று (23-09-2017) காலை 9.30 மணி முதல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்று மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் தினமலர் நிருபர் அப்துல்லாஹ் கூறுகையில் ” காலை முதல் மதியம் ஆகியும் மின்சாரம் இல்லை. சாதாரணமாக மின்தடை நேரங்களை விட மோசமாக உள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்” என்றார்.

மக்களுக்காவே நாங்கள் என்று பதவிக்கு வந்த அரசும், அரசு அதிகாரிகளும் மக்களைப் பற்றி எந்த சிந்நனையுமே இல்லாமல் உள்ளார்கள் என்பது மட்டுமே புரிகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. சரியாக சொன்னீர்கள். சாதாரணமாக மாதாந்திர பணி மாதம் ஒரு முறை தான் நடக்கும். அப்படி பார்த்தால் மாதம் ஒரு முறை மின்சாரம் நிறுத்தினால் சரி, இவர்கள் வாரம் ஒரு முறை மின்சாரம் நிறுத்துகிறார்கள். இது மிகவும் கண்டிக்க தக்கது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள். ஜெனெரேட்டர் இன்வேர்ட்டர் எத்தனை குடும்பம் வைத்து இருப்பார்கள். புரிந்தது கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும்.

Comments are closed.