கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டம் வெற்றியா?? அல்லது தோல்வியா??

கீழக்கரை நகராட்சியும் அவர்களுக்கு இருக்கும் வசதிகளையும், ஊழியர்களையும் வைத்து இயன்ற அளவு பணிகளை செய்துதான் வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை??. உதாரணமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி வழியாக பல வழிகளிலும், அதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தையும் கீழக்கரையின் ஓவ்வொரு பகுதிகளிலும் உறுதிமொழியுடன், செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் பொதுமக்களின் பங்களிப்பும், விழிப்புணர்வும் குறைவு என்றே கூறலாம். பல நேரங்களில் நகராட்சி செயல்பாடு தாமதமாக இருந்தாலும், பொதுமக்கள் அவரவர் இடங்கள் என்பதை மறந்து, அதனால் ஏற்படும் நோய்களை பற்றிய கவலை இல்லாமல் தெருவோரங்களில் குப்பையை கொட்டுவது மிகவும் வேதனையான விசயம்.

உதாரணமாக நடுத்தெரு ஜும்ஆ பள்ளயின் பின் புறம் ஜமாத்தினரின் ஒத்துழைப்போடு பல வருடங்களாக தூய்மை பாதுகாக்கப்பட்டு வந்தது, ஆனால் கடந்த சில மாதங்களாக அறிவிப்பு பலகையும், எச்சரிக்கை பலகையும் இருந்தும் பொதுமக்கள் குப்பையை கொட்டி அந்த பகுதியை மக்கள் நடமாட முடியாத நிலைக்கு மாற்றியுள்ளார்கள். அரசாங்கத்தையும், அதன் நிர்வாகத்தை மட்டும் குறை கூறாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தூய்மை என்பதை சிந்திக்க வேண்டும், அப்பொழுதுதான் வீடும், நாம் வாழும் நாடும் உருப்படும்….

புனித ரமலான் வாழ்த்துக்கள்..