அனைவரும் உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்ற உதவி புரியும் ரய்யான் உம்ரா திட்டம்..

இஸ்ஙாமியராக பிறந்த யாருக்கும் உம்ரா, ஹஜ் போன்ற கடமைகளை செய்ய ஆசை இல்லாமல் இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை உடைய மக்களுக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருக்கும். இப்புனித கடமையை அனைவரும் எளிமையாக நிறைவேற்றும் பொருட்டு புதிய தவணை முறைத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் நவம்பர் 2017-லிருந்து அக்டோபர் 2018 வரை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸின் கிளை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கபட்ட முகமைகளிலும் பிரதி மாதம் *ரூ.4,900* செலுத்தி, 10 மாதத் தொகை நிறைவடைந்தவுடன் *நவம்பர் 2018*-ல் உம்ரா பயணம் மேற்கொள்ளலாம்.

அவ்வாறில்லாமல் தவணைத் தொகையை முன்கூட்டியே கொடுத்து முன்பாகவே உம்ரா பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ரய்யானின் வழக்கமான பேக்கேஜ்களில் ஏதாவது ஒன்றில் அதற்குரிய பாக்கி பயணத்தொகையை செலுத்தி பயணம் செய்யலாம். தவணை முறைத்திட்டத்தை நிறுவன இயக்குநர் டாக்டர் ஹுஸைன் பாஷா 20.09.2017 அன்று மண்டல மேலாளர் பெரோஸ் மாலிக் கான் முன்னிலையில் மும்பையில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் அவசியத்தைக் குறித்து சவுதி அரேபியாவிலிருந்து ஆன்லைன் மூலமாக நிறுவன இயக்குநர் பொறியாளர் முஹம்மது இர்பான் அவர்கள் எடுத்துரைத்தார்.

மேலும் விபரங்களுக்கு, *044-48575554* அல்லது *7397733575* என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்பு:- இதில் உள்ள திட்டத்திற்கு கீழை நியூஸ் பொறுப்பு கிடையாது, தனி நபரின் விருப்பத்திற்கு உட்பட்டது..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..