நடிகர் கமல் மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு..

சென்னையில் இன்று டில்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் இன்று 21-09-207 அன்று நடிகர் கமலஹாசன் இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தேசிய தலைவர்கள் சஞ்சய் சிங், அசுதோஷ் சோம்நாத், பாரதி, பிரிதிவி ரெட்டி ஆகியோர் உடனனிருந்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் டிவிட்டர் தளம் மூலமாக தொடங்கி அன்றாட தமிழ்நாடு அரசியலையும் ஆளும் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து தனியார் தொலைகாட்சியில் நீண்ட நேரம் நடந்த உரையாடலில் அரசியல்வாதிகளின் ஊழலை கடுமையாக விமர்சித்தும் அவர் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார்.


அதைத் தொடாந்து அவர் தலைமையேற்று நடத்தி வரும் பிகபாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு தொடர்ந்து அரசியல் கலந்த அறிவுரைகளை வழங்கிய வண்ணம் இருப்பது மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையாகாது.

அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த முரசொலி பவள விழாவிலும் தன்னுடை அரசியல் பிரவேசத்தை பல பத்திரிக்கையாளர் மற்றும் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கும் அவருடைய திரை உலக நண்பர் ரஜினிகாந்த் முன்னரும் தெரிவித்தார். பின்னர் கடந்த வாரம் இந்து பத்திரிக்கை சார்பாக நடந்த விழாவில் மக்கள் விரும்பினால் தனிகட்சி காண்பேன் மற்றும் ரஜினியையும் இணைத்து கொள்வேன் என்று அறிவித்தது அரசியல் பார்வையாளர்களின் கவனம் நடிகர் கமல் மீது முழுமையாக திரும்பியுள்ளது.

இத்தருணத்தில் நடிகர் கமல் மற்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்திப்பு அரசியல் முக்கியம் வாய்ந்தாகவே காணப்படுகிறது. முந்தைய காலங்களில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நாட்டை ஆண்டே சரித்திரமும் உண்டு அதே போல் சினிமா உலகையே தன் நடிப்பால் கட்டி வைத்திருந்தவர்கள் அரசியலில் வந்து நிராயுதபாணியாகிய சரித்திரமும் உண்டு. கமலின் அரசியல் பிரவேசம் சாதனையாகப் போகிறதா இல்லை அவருக்கு வேதனையாகப் போகிறதா என்பது அவர் அரசயலுக்கு முழுமையாக நுழைந்தால் மட்டுமே அறியமுடியும்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.