இராமநாதபுரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய ஒருவர் கைது..

நேற்று 17.09.2017-ம் தேதி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  TN 65 Q 0149 என்ற எண் கொண்ட டிராக்டரை சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியுமின்றி, சட்டவிரோதமாக நூதன முறையில் செங்கல் கற்களால் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மணல் கடத்தல் சம்பந்தமாக 1) அலெக்ஸ் பாண்டியன், த/பெ கோபி, தொருவளூர் கைது செய்யப்பட்டு அவருடைய ட்ராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக இராமநாதபுரம் பஜார் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.