‘கோடை இடி’ ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் – இராமநாதபுரத்தில் இனிதே துவங்கியது

கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த (கோடை இடி பிரதர்ஸ்) சகோதரர்கள் சீனி காதர், ரசூல் ஜெமீன், செய்யது ரலீன், ஹமீது மதார் ஹஸீன், ஜகுபர் முஹீன் ஆகியோர்களின் முயற்சியில், ‘கோடை இடி’ ஆட்டோ மொபைல்ஸ் என்கிற பெயரில் புதியதோர் விற்பனையகம், இன்று (16.09.2017) இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘கோடை இடி’ முஹீன் நம்மிடையே பேசும் போது ” இறைவனுடைய அருளால் இன்று திறந்திருக்கும் எங்களுடைய நிறுவனத்தில் அனைத்து வாகனங்களுடைய தரமான உதிரிபாகங்களும் நியாயமான விலையில் விற்பனை துவங்கியுள்ளோம். அனைத்து சமுதாய நண்பர்களும் ஆதரவு தர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கோடை இடி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தாரின் வியாபாரம் மென் மேலும் சிறக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.