கிரிக்கெட்டில் அன்னிய மண்ணிலும் கால் பதிக்கும் கீழக்கரை அன்பர்கள்..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் சமீபத்தில் எட்டு அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை அணியினர் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர்.

இதுபற்றி கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறுகையில் வேலைபளுவுக்கு மத்தியில் விடுமுறை நாட்களில் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது மனதுக்கு புத்துணர்ச்சியை தருகிறது என்றார்.