Home செய்திகள் இராமநாதபுரம் முகமது தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியில் நோய்கள் பற்றிய கண்காட்சி முகாம்…

இராமநாதபுரம் முகமது தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியில் நோய்கள் பற்றிய கண்காட்சி முகாம்…

by ஆசிரியர்

பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய கண்காட்சி முகாம் இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதார துறையினர் சார்பாக இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள முகமது தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் பூச்சிகள் மூலம் பரவும் டெங்கு,மலேரியா ,சிக்குன்குனியா மற்றும் எலிக்காய்ச்சல் பற்றி விரிவாக மாணவர்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார் ,மேலும் தேக்கிவைத்த நீர் உள்ள பாத்திரங்களை துணிமூலம் மூடிவைத்தால் கொசுக்கள் உற்பத்தியாகாது என விளக்கமளித்தார்.

பின்னர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் குமரகுருபரன் பொதுமக்களின் தற்போதைய எதிரி டெங்கு காய்ச்சல் மட்டுமே எனவும் மாணவர்கள் தங்களது வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களான உபயோகமற்ற பொருட்களான டயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் உபயோகமில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி நீர் தேங்காமல் பார்த்து கொண்டாலே கொசுக்கள் இல்லாமல் வாழலாம் எனவும், மாணவர்கள் கற்றவற்றை உறவினர்களுக்கும் தெரிவித்து கொசு வராத வண்ணம் வீடுகளை சுத்தமாக வைத்து பொது சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறும் அரசு மருத்துவமனையை நாடுமாறும் வேண்டிக்கொண்டார்.

பின்னர் மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் கூறும்போது, மண்டபம் ஒன்றியத்தில் அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் 75 சதவீத பள்ளிகளில் மாணவர்களை சந்தித்து டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம் எனவும், விரைவில் நூறு சதவீதம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி டெங்கு இல்லாத நிலையை மாணவர்கள் மூலமாக கொண்டு வருவோம் என உறுதிபடுத்தினார். சுகாதார ஆய்வாளர் கோபிநாத் வீடு தேடி வரும் பொது சுகாதார துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு வேண்டி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!