இந்திய உணவு கட்டுப்பாடு கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் சந்திப்பு..

இந்தியாவில் ​ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு இந்திய உணவு கட்டுப்பாடு கழகமும், தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து இந்திய உணவு கட்டுப்பாடு கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி 12.9.2017ம் நாளாம் அன்று இக்ளு ரெசிடன்சி, பெமினாஷாப்பிங் மால் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

​இந்நிகழ்ச்சியில் இந்திய உணவு கட்டுப்பாடு கழகம், கீழக்கரை அமைப்பு குழுவின் தலைவர் முனைவர் எஸ். சுமையாவிருந்தினர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஷீலா கிருஷ்ணசுவாமி, தலைவர், இந்திய உணவு கட்டுப்பாடு கழகம் மற்றும் இயக்குநர் இந்திய உணவு கட்டுப்பாடு சங்கத்தின் சர்வதேச கூட்டமைப்பு முனைவர். தாரிணி கிருஷ்ணன், முன்னாள் இந்திய உணவு கட்டுப்பாடு கழகத்தின் தலைவர் அஜித்,பெரு நிறுவன தகவர் தொடர்பு தலைவர் மற்றும் இளங்கோ, மண்டல வணிக மேலாளர், பிரிட்டீஷ் பையலாஜிக்கல் ஆகியோர் பங்கேற்றார்கள்.

​உணவு கட்டுப்பாடு தொடர்பான செய்திகளையும், மேற்கொள்ளும் முறைகளின் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடல் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரிட்டீஷ் பையலாஜிக்கல் கம்பெனி மற்றும் தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர்கல்லூரியின் மனையியல் துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக13.09.2017ம் நாளான்று தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் “நியூட்ரிகேட்” என்னும் பெயரிலான ஊட்டச்சத்து கல்வி மையத்தைத் துவங்கி வைத்தனர்.

​​​​​​​​​​

புனித ரமலான் வாழ்த்துக்கள்..