கீழக்கரை காதரியா சர்பத் இப்பொழுது மலேசியாவில்…

சர்பத் என்றாலே கீழக்கரை மற்றும் சுற்றிவட்டார மக்களுக்கு உடனே நினைவில் வருவது காதரியா சர்பத். பல வருடங்களாக தமிழகத்தில் பல இடங்களில் இந்த சர்பத் விற்கப்பட்டு வருகிறது.

அந்த சர்பத் மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான UM STORESல் விற்பனைக்கு வந்துள்ளது. மலேசியாவில் அதிகமான தமிழ் மக்கள் வாழும் காரணத்தால் கீழக்கரை புகழ் காதரியா சர்பத் மலேசியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

கீழக்கரை புகழ் காதரியா சர்பத் வெளிநாட்டிலும் முத்திரை பதிப்பது மகிழ்ச்சியான செய்தியே!