சிறு மழையும் தாங்காத கீழக்கரை சாலைகள் – என்று விழிக்கும் நகராட்சி.

கீழக்கரை மக்கள் மழைக்காக தவமாக தவம் இருந்து வருகிறார்கள். ஆனால் மழைக்கு அடுத்து ஏற்படும் சாக்கடை தேக்கத்தை நினைத்தால் அனைவருக்கும் மனதில் ஒரு பீதிதான் கிளம்புகிறது.

இன்று பெய்த சிறிய மழையில் கடைத் தெருவில் இருந்து வடக்குத் தெரு வழியாக உள்ளே செல்லும் வழிகள் மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து நடக்க முடியாத சூழலை உருவாகியுள்ளது.

மாற்றுபாதையாக இருந்து வரும் CSI சர்சில் தொடங்கும் சாலையும், மழை நீரால் மிதக்கிறது. இந்த சாலையில்தான் அதிகமான மருத்துவமனைகள் உள்ளது. மக்கள் மருத்துவமனைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வந்தால் மட்டுமே விழித்து கொள்ளும் நகராட்சி நிர்வாகம் என்று மக்கள் பிரச்சினைக்காக தீர்வு காணும் என்பது தெரியவில்லை…

புனித ரமலான் வாழ்த்துக்கள்..