16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி கோப்பையை வென்றது..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி 11 மற்றும் 12.09.2017 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 21 பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து விளையாடினர்.

​இரண்டாம் நாள் நடைபெற்ற இறுதி சாம்பியன் போட்டியில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி , புதுக்கோட்டை மவுன்ட் சியான் பொறியியல் கல்லூரியை 25-22, 25-16 என்ற நேர்செட்டுகளில் வெற்றி பெற்று அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல வாலிபால் சாம்பியன் பட்டத்தை பெற்றது. மூன்றாம் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி,காரைக்குடி ராஜ ராஜ பொறியியல் கல்லூரியை வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கைப்பந்து கழக செயலாளர் சித்திரைப்பாண்டியன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்னாள் பொது மேலாளர் துரைசிங்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ரவிச்சந்திரா ராமவன்னி ஆகியோர் கலந்து இறுதிப்போட்டியை துவக்கி வைத்தனர்.

​அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல அளவிலான பரிசளிப்பு விழா கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

​கல்லூரி முதல்வர் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், தங்க பதக்கம் மற்றும் பரிசுக்கோப்பையை வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த புதுக்கோட்டை, மவுன்ட் சியான் பொறியியல் கல்லூரி அணிக்கு கல்லூரி டீன் சான்றிதழ்கள், வெள்ளி பதக்கம், பரிசுக்கோப்பையை வழங்கினார்.


​இறுதியாக நன்றியுரையை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் செய்திருந்தார்.