நீலத்திமிங்கலம் – ப்ளுவேல் விபரீத விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நீலத்திமிங்கலம் – ப்ளுவேல் எனும் விபரீத விளையாட்டு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் இராமநாதபுரம் நீதிமன்ற துணை நீதிபதி சுவர்ணகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் பேசுகையில் இன்றைய இளைய தலைமுறையினர் நீலத்திமிங்கலம் எனும் ஆன்-லைன் விளையாட்டு மூலம் மனநல பாதிப்புக்குள்ளாவதோடு தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஊடகங்கள் வாயிலாக இந்த விளையாட்டின் தீமைகளை பற்றி நாள்தோறும் எடுத்துக் கூறப்பட்டு வந்தாலும், இன்னும் அது இளைஞர்களிடையே சென்றடையவில்லை. ஆகவே மாணவ மாணவியர் இது போன்று உயிரை மாய்த்து கொள்ள வைக்கும் ஆன்லைன் விளையாட்டை தங்களது அலைபேசியில் டவுன்லோடு செய்யாமல் இருப்பதுடன் விளையாட்டு தொடர்வதை தவிர்த்து மற்ற இளைஞர்களுக்கும் இதுகுறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு எடுத்துக்கூறினர். இந்நிகழ்ச்சியில் முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் குழந்தை நலம் மேம்பாட்டு சார்பு ஆய்வாளர் ஜீவரெத்தினம் மற்றும் இராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ஆனந்த் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுலைமான், ராஜமாணிக்கம், எஸ்தர் கண்மணி மற்றும் செஞ்சுருள் சங்க அலுவலர் ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர்யூசுஃப் மற்றும் செயலர் ஜனாபா ஷர்மிளா ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..