கீழக்கரையில் திருட்டு சம்பவம்..

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சார்ந்த ஹாஜி என்பவர் குடும்பத்தோடு வடக்குத் தெரு மணல் மேடு செல்லும் வழியில் உள்ள மதி கடை பகுதியில் அமைந்துள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

சில மாதங்களாக அந்த வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டில் தங்கி வருகின்றனர்.இதனை அறிந்த மர்ம நபர்கள் நல்லிரவில் கதவை உடைத்து பீரோவில் உள்ள தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.வீட்டுக்கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்ட பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உரியவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போனதை அறிந்த அந்த வீட்டில் வசிப்பவர்கள் உடனே கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கைரேகை மற்றும் தடயங்கள் சேகரித்த பின்னர் ஓரிரு தினங்களில் திருடர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர்.

கீழக்கரையில் இது போன்ற திருட்டு சம்பவம் சில தினங்களுக்கு முன்பு மரக்கடையில் நடந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது…

1 Comment

Leave a Reply

Your email address will not be published.