மக்கள் பயன்பாட்டுக்கு அழகிய முறையில் உருவாகி வரும் மாமூனார் பூங்கா…

கீழக்கரையில் கல்லூரி மாணவர்களின் கடுமையான உழைப்பாளும் உருவாகி வரும் மாமூனார் பூங்கா கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அறியப்படுகிறது.  இந்த பூங்கா கீழக்கரை சதக் கட்டிட கலை மாணவர்கள் ( School of Architecture) NATIONAL ASSOCIATION OF STUDENT ARCHITECTURE (NASA) ஒப்புதலுடன் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் பல தன்னார்வ நிறுவங்களின் உதவியுடன் உருவாக்கி வருகிறார்கள். இம்மாணவர்கள் கீழக்கரை கடற்கரையில் அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி மணி மண்டபம் அருகில் உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து இந்தப்பூங்காவை உருவாக்கி வருகிறார்கள்.


இந்த இயற்கை பூங்காவை பற்றிய

சிறப்பு பார்வை

கீழை நியூஸ் டி.வியில் விரைவில்….


இந்தப்பூங்கா முழுக்க முழுக்க சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைக்கப்படுவது குறிப்பிடதக்கதாகும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.