கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அதிரடியாக தூய்மைப்படுத்தப்படுகிறது..

கீழக்கரை புதிய பஸ் நிலையம் இன்று (12-09-2017) அதிரடியாக சுத்தம் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பஸ் நிலையம் முழுவதையும் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஆனால் இந்த தூய்மைப்பணி மக்கள் நலன் கருதி செய்யப்படவில்லை. இன்னும் சில நாட்களில் பஸ் நிலையத்தை புதுப்பிக்க ( Renewal ) செய்ய வேண்டி இருப்பதால் பஸ் நிலையத்தை பார்வையிட ( RTO ) போக்குவரத்து அலுவலர் வருகைதரவிருப்பதால் தான் இப் பணி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இப்பணிகள் மதுரை மண்டல இயக்குனர் உத்தரவின் பேரில் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

1 Comment

  1. அட பாவிங்களா , இதுக்குதான் இவ்வளவு பில்ட் அப் பா? , சரி இப்படி அடிக்கடி வந்து செக் பண்ணின நல்லா இருக்கும்.

Comments are closed.