பெண் ஆசிரிய பெருமக்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை..

கீழக்கரை அல்பய்யினா பள்ளி சார்பாக 09-09-2017 அன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான சிறந்த கல்வியை நோக்கி (Towards Excellence in Education) என்ற கருத்தை மையப்படுத்தி பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை பெண் ஆசிரியைகளுக்காக பிரத்யேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி பட்டறையை முன்னெடுத்துச் செல்வதற்கு சென்னையில் இருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இப்பயிற்சி பட்டறையில் இன்றைய கல்வி முறை, தற்போதைய கல்வி முறையில் சந்திக்கும் பிரச்சினைகள், ஆசிரியர் மாணவர்கள் உறவு மற்றும் எதிர்காலத்தில் கல்வி முறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் போன்ற பல் வேறு விசயங்கள் விவாதக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல பள்ளிகளில் இருந்து பல ஆசிரயைகள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.