உலக அளவில் சாதனை படைத்த முன்னாள் மாணவனை கௌரவிக்கும் விழா…

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் மாணவர் ஃபஹீம். இவருக்கு உள்ள அபார ஞாபக சக்திக்காக உலகளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவரை கௌவரவிக்கும் வண்ணமாக இன்று (09-09-2017) வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகைதீன் இபுராஹிம், அகமது மிர்சா, பசீர் மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்து அம்மாணவணுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு அம்மாணவனுடன் கலந்துரையாடினார்கள். உதாரணமாக மாணவர்கள் கேட்ட 33 கேள்விகளில், 30கான பதிலை சில நிமிடங்களில் கூறி அசத்தினார். கீழைநியூஸ் நிர்வாகமும் அம்மாணவனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.