நகராட்சியின் அலட்சியத்தால், லட்சியத்தை அடைய முடியாமல் சோர்ந்து போகும் கல்லூரி மாணவர்கள்..

கீழக்கரையில் கடந்த இரண்டு மாதங்களாக முகம்மது சதக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், வள்ளல் சீதக்காதி மணி மன்டபத்தின் அருகில் உள்ள பகுதியை தத்தெடுத்து பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்கு ஏதுவாக மைமூனார் பூங்கா என்ற பெயரில் பூங்கா ஒன்றை வடிவமைத்து வந்தார்கள்.

ஆனால் இன்று காலை 7.30 மணி வரை தூய்மையாக காட்சியளித்த அந்த இடம் நகராட்சியின் கவனக்குறைவாலும், பொதுமக்களின் பொறுப்பின்மையாலும் அருகில் இருந்த சாக்கடை குழாய் அடைத்து அப்பூங்கா முழுவதும் சாக்கடையால் நிரம்பி விட்டது. ஆனால் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் இப்பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளார்கள். என்று தீருமோ இந்த சாக்கடை பிரச்சினை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..