கீழக்கரையில் தலைகீழாக கிடக்கும் தூய்மையான தமிழகம்…

கீழக்கரை நகரில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டி வருகின்றன. மறுபுறம் குப்பைகள் மழை போல் குவிந்து கிடக்கிறது, அடுத்து அழகு சேர்ப்பது போல் வற்றாத ஜீவநதியாக சாக்கடை ஆறு எங்கு பார்த்தாலும் வழிந்தோடுகிறது.

இதையெல்லாம் சரி செய்யும் விதமாக பல லட்சம் செலவில் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. ஆனால் முறையான திட்டமில்லாத காரணத்தால் மொத்த தொட்டிகளும் உபயோகத்தில் இல்லாமல் ஒரே இடத்தில் தலை கீழாக கிடக்கிறது.

நகராட்சி சார்பாக டெங்கு ஒழிப்பு தீவிர பிரச்சாரம் ஒருபுறம், மக்கள் வாழும் பகுதியில் டெங்கு கொசு வசதியாக இனப்பெருக்கம் செய்ய உபயோகமில்லாமல் கிடக்கும் குப்பைத் தொட்டிகள். குப்பைத் தொட்டிகள் வாங்கிய நோக்கம் அறிந்து திட்டத்தை நிறைவேற்றுமா நகராட்சி நிர்வாகம்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..