கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் பொதுமக்கள் சேவைக்கு அர்பணிப்பு…

கீழக்கரை வடக்குத் தெருவில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு பல மார்க்க பணிகள் மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (02-09-2017) நாசா அறக்கட்டளை சார்பாக மக்கள் சேவைக்கு அர்பணிக்கப்பட்டது.

நிகழ்வின் வாழ்த்துரையை அல் மத்ரஸதுல் முஹமதியா முதல்வர் ஆசிஃப் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வடக்குத் தெரு ஜமாத் தலைவர் ரெத்தின முஹம்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

கீழக்கரை காவல்துறை துணை கண்கானிப்பாளர் பாலாஜி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக நாசா ட்ரஸ்டின் மேனேஜிங் ட்ரஸ்டி மஹ்ரூஃப் நன்றியுரை வழங்கினார்