சேவை தொடங்கிய முதல் நாளில் மக்கள் சேவையில் நாசா ஆம்புலன்ஸ்…

இன்று மாலை (02-09-2017) வடக்குத் தெரு சமூக அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.

இன்று மக்கள் அதிகமாக குழுமும் மணல் மேடு பகுதியில் கீழக்கரை சாலை தெருவைச் சார்ந்த ரசாக் அலி என்பவர் தவறுதலாக அங்கு வியாபாரம் நடந்து கொண்டிருந்த பகுதியில் எண்ணெய் சட்டியில் தவறுதலாக கை வைத்ததில் எண்ணெய் கொட்டி காயமடைந்தார். உடனடியாக நாசா ஆம்புலன்ஸ் விரைந்து சென்று காயமடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் இவ்வளவு துரிதமாக செயல்பட்டும் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதது மிகவும் வேதனையான செயல். உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

1 Comment

  1. வடக்கு தெரு சமூக நல அமைப்பினரின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.மக்கள் சேவையில் மேலும் N A S A வின் பங்களிப்பு தொடர இறைவனை வேண்டுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published.